ADDED : டிச 19, 2025 05:22 AM
பரமக்குடி: பரமக்குடி ஒன்றியம் தெளிச்சாத்த நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியை கவிதா மாணவர்களுக்கு வாசிக்கும் பயிற்சியில் ஊக்கமளித்து வருகிறார். புத்தகத் தேனீக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் அஞ்சல் அட்டையில் வரைந்த தேசிய சின்னங்கள், தலைவர்கள் படங்களை 'ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' புத்தகத்தில் பதிவு செய்ய வைத்தார்.
ஆசிரியை, அஜய், ஆத்விக் குமார், சஸ்மிதா, சபரீஷ், சாத்விக், கிளாரன்ஸ், தீப ஸ்ரீ, ஹன்சிகா ஸ்ரீ, சுபஸ்ரீ ஆகிய மாணவர்களுக்கும் கடலுாரில் நடந்த அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தன்னார்வ கூட்டு முயற்சிக்கு வானொலி கல்வி குழுவினர் பாராட்டு மற்றும் பதக்கங்களை வழங்கினர்.
தொடர்ந்து பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராமு, வட்டார கல்வி அலுவலர் ஜெயா பாராட்டினர். தலைமை ஆசிரியை உமா மற்றும் ஆசிரியர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

