ADDED : டிச 01, 2024 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே அத்தானுார் கிராமத்தில் ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் திருவாடானை வட்ட சட்ட பணிகள் குழு இணைந்து சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
மாவட்ட உரிமையியல் நீதிபதியும், வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவருமான மனீஷ்குமார் தலைமை வகித்தார். தாசில்தார் வரதராஜன், யூனியன் தலைவர் ராதிகா, அரசு வழக்கறிஞர் கணேஷ் பிரபு, பீ.டி.ஓ., மலைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டப் பணிகள் குழுவின் உதவியாளர் முத்துவிஜயன் வரவேற்றார்.
சட்டப்பணிக்குழு பணிகள், இலவச சட்டஆலோசனை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. சட்ட தன்னார்வலர் கோட்டைச்சாமி நன்றி கூறினார்.