நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: கடம்பாகுடி கிராமத்தில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
வக்கீல் ஜெகன் தலைமை வகித்தார். பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் குறித்தும், திருவாடானை நீதிமன்றத்தில் இயங்கும் வட்ட சட்டபணிகள் அலுவலகத்தை அணுகி பயன்பெறுவது குறித்தும் பேசப்பட்டது. சட்ட தன்னார்வலர் கோட்டைசாமி நன்றி கூறினார்.