ADDED : அக் 18, 2025 03:40 AM

ராமநாதபுரம்: தீபாவளியை முன்னிட்டு பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து ராமநாதபுரம் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை யினர் ராமநாதபுரம் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தீயணைப்பு துறை மாவட்ட உதவி அலுவலர் கோமதி அமுதா தலைமை யில் நடந்த முகாமில் தீயில் இருந்து பாதுகாக்கும் வழிமுறை குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
அப்போது அவர் கூறியதாவது:
பெரியவர்கள் உதவியுடன் பட்டாசு வெடிக்க வேண்டும். காட்டன் துணி அணிந்திருக்க வேண்டும். சாதாரண பொருட்களில் தீ பிடித்தால் தண்ணீர் கொண்டு அணைக்கலாம். அதுவே எண்ணெய் போன்ற வற்றில் தீ பிடிக்கும் போது தண்ணீர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றார். தொடர்ந்து மாணவர்களுக்கு தீயை அணைப்பது குறித்து செய்முறை விளக்கம் செய்து அளிக்கப்பட்டது.