ADDED : நவ 19, 2024 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: தேரிருவேலி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் புகையிலை தடுப்பு, டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. டாக்டர் திவான் முகைதீன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் கரீம்கனி. எஸ்.ஐ.,க்கள் சத்யா, சுரேஷ் முன்னிலை வகித்தனர். தேரிருவேலி ராவுத்தர் சாகிப் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஊர்வலம் வந்தனர். போதை பழக்கத்தால் ஏற்படும் தீங்குகள் குறித்தும், டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சுகாதார ஆய்வாளர்கள் முனியசாமி, சதாம் உசேன், சபரிமுருகன், போலீஸ் அன்பரசன் பங்கேற்றனர்.