/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாணவர் சேர்க்கைக்கு விழிப்புணர்வு ஊர்வலம்
/
மாணவர் சேர்க்கைக்கு விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : மார் 06, 2024 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் திருப்பாலைக்குடி அருகே பால்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தலைமை ஆசிரியை தமிழரசி தலைமை வகித்தார்.
பள்ளி மேலாண்மை குழு தலைவி கனிமொழி, ஆசிரியர் சமய தேவன் முன்னிலை வகித்தனர்.
முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலத்தில் அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்ப்பது குறித்தும், அரசு பள்ளியில் சேர்த்தால் மாணவர்களுக்கு கிடைக்கும் நலத்திட்டங்கள் குறித்தும் ஊர்வலத்தில் வலியுறுத்தப்பட்டது.
கிராம கல்விக் குழு உறுப்பினர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

