/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் பால்குடம் அக்னிசட்டி ஊர்வலம்
/
பரமக்குடியில் பால்குடம் அக்னிசட்டி ஊர்வலம்
ADDED : மார் 09, 2024 08:24 AM
கமுதி : -கமுதி அருகே கோட்டை முனீஸ்வரர், செல்வ விநாயகர், பாலமுருகன், ஜக்கம்மாள் கோயிலில் 47ம் ஆண்டு மகா சிவராத்திரியை முன்னிட்டு மாசிக்களரி விழா மார்ச் 1ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி, சக்திகரகம் எடுத்து சாலையின் முக்கிய விதிகளில் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். பின் கோட்டை முனீஸ்வரர், செல்வ விநாயகர், பாலமுருகன், ஜக்கம்மாள் உட்பட பரிவார தெய்வங்களுக்கு பால், சந்தனம் உட்பட 16 வகை அபிஷேகம் நடந்தது.
கோட்டை முனீஸ்வரர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. ராமநாதபுரம் டி.ஐ.ஜி., துரை, எஸ்.பி.,சந்தீஷ் உட்பட போலீஸ் குடும்பத்தினர், முதுகுளத்துார், கமுதி, பரமக்குடி அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

