/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மழையின்றி வெயில் அதிகரிப்பால் உப்பு உற்பத்தி துவக்கம்: பாத்திகளில் தேங்கிய கழிவுகள் அகற்றம்

UPDATED : பிப் 13, 2024 05:35 PM
ADDED : பிப் 13, 2024 03:55 AM

வாலிநோக்கம் : மழைக்காலம் முடிந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், கோப்பேரிமடம், தேவிப்பட்டினம், வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உப்பள பாத்திகளில் தேங்கிய கழிவுகளை அகற்றி உப்பு உற்பத்தி செய்யும் பணிகள் துவங்கியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி, காஞ்சிரங்குடி, ஆணைகுடி, மோர்க்குளம், தேவிப்பட்டினம், வாலிநோக்கம், கோப்பேரி மடம், திருப்பாலலைக்குடி, சம்பை, நதிப்பாலம் உள்ளிட்ட இடங்களில் ஆண்டுதோறும் ஜன. துவங்கி செப்., வரை உப்பு உற்பத்தி நடக்கிறது.
குறிப்பாக வாலிநோக்கத்தில் தமிழ்நாடு அரசு உப்புநிறுவனம், தனியார் உப்பளங்கள் உள்ளன. இங்கு 500க்கு மேற்பட்டவர்கள் உப்பு உற்பத்தி பணியில் ஈடுபடுகின்றனர்.
கடந்த டிச., ஜன., மழையால் உப்பு உற்பத்தி முடங்கியது. இந்நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உப்பு உற்பத்திக்காக முதற் கட்டப்பணிகள் வாலிநோக்கம் பகுதியில் துவங்கியுள்ளது.
பாத்திகளில் அடியில் தேங்கிய உரக்கழிவுகளை அகற்றி சீரமைக்கும் பணி நடக்கிறது.
இப்பகுதியில் ஆழ்குழாய்கிணறு தண்ணீர் எடுத்து பாத்திகளில் தேக்கம் உப்பு உற்பத்தி மேற்கொண்டுள்ளனர்.
இங்கிருந்து துாத்துக்குடி உரத்தொழிற்சாலை, ராசயன தொழிற்சாலைகளுக்கு செல்கிறோம். முதல்தரம் அயோடின் சேர்க்கப்பட்ட உப்பு உணவு தேவைக்காக பயன்படுத்தப்படுகிறது.
இரண்டாம் தரம் சோப்பு, கெமிக்கல், தோல் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது என உப்பள தொழிலாளர்கள் கூறினர்.