ADDED : நவ 14, 2026 05:37 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டி கிழக்கு கடற்கரை சாலையில் நடந்தது. எஸ்.பி., ஹரி கிரண் பிரசாத், மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன் கொடியசைத்து துவக்கி வைத்தனர். போட்டியானது 13 வயது, 15 வயது, 17 வயதிற்குட்பட்டோர் பிரிவுகளில் நடந்தது.
மாவட்டம் முழுவதும் இருந்து 250 மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மிதிவண்டி சங்கத் தலைவர் ஜான்சன் கலைசெல்வன், ஹாக்கி சங்கத் தலைவர் கிழவன் சேதுபதி சான்றிதழ்கள் வழங்கினர். ––
