UPDATED : நவ 14, 2026 05:24 PM
ADDED : நவ 14, 2026 05:22 PM
பெரியபட்டினம்: பெரியபட்டினத்தில் வாப்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் பெண்களுக்கான 15 நாட்கள் இலவச தொழில் திறன் மற்றும் தொழில் மேம்பாட்டு பயிற்சி துவக்க விழா நடந்தது.
பெரியபட்டினம் ஊராட்சி பெண்கள் இதில் கலந்து கொண்டனர். வாப்ஸ் நிறுவனம் மற்றும் ஓ.எப்.எஸ்.ஐ., ஒமேகா போரம் ஆகியவை இணைந்து பயிற்சி அளிக்கின்றன. ஏற்கனவே ஒரு மாதம் தொழில் திறன் பயிற்சி முடித்த பெண்களுக்கு அடுத்த கட்ட தொழில் பயிற்சிக்காக 15 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கு வாப்ஸ் நிறுவனத்தின் திட்ட அலுவலர் சுப்புராஜன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக திருப்புல்லாணி உதவி பி.டி.ஓ., விஜயகுமார், சமூகநீதி மற்றும் மனித உரிமை டி.எஸ்.பி., தங்க கிருஷ்ணன், பெரியபட்டினம் இந்தியன் வங்கி மேலாளர் சிவச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். பயிற்சியில் பிராண்டிங், பேக்கேஜிங், டிஜிட்டல் மார்க்கெட்டிங், நிதி மேலாண்மை மற்றும் தொழில் வணிக ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பயிற்சியாளர் மேனகா நன்றி கூறினார்.
