நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை அருகே டி.நாகனி கிராமத்தில் காளி கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு கோயில் கதவை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிச் சென்றனர்.
காலையில் அப்பகுதி வழியாக சென்றவர்கள் கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.

