/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வயல்வெளிகளில் இரை தேட குவிந்த பறவைகள்
/
வயல்வெளிகளில் இரை தேட குவிந்த பறவைகள்
ADDED : நவ 24, 2025 05:44 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் சுற்றுப்புற பகுதிகளான இருதயபுரம், நெடும்புளிக்கோட்டை, பெத்தார் தேவன் கோட்டை, பெரியார் நகர், புல்லமடை, வல்லமடை, ராமநாதமடை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் நெற்பயிர்கள் வளர்ச்சி நிலையில் உள்ளன.
பெரிய கண்மாய் பாசன பகுதிகளான இப்பகுதிகளில் நெற்பயிர்கள் பசுமை நிலையில் உள்ளதால் பல்வேறு பறவைகள் முகாமிட்டு புழு, பூச்சிகளை இரைகளாக்கி வருகின்றன.
குறிப்பாக கருநாரைகள், கொண்டை மூக்கன் நாரைகள், செங்கால் நாரைகள், கொக்குகள் உள்ளிட்ட பல்வேறு பறவைகள் ஆங்காங்கே நெல் வயல்களில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து இரை தேடு கின்றன.
பசுமை போர்த்திய நெல் வயல்களில், ஆங்காங்கே முகாமிட்டு வரும் பறவைகளால் பசுமை போர்த்திய வயல்களில் மேலும் அழகு பெறுகிறது.

