/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பா.ஜ., பூத் கமிட்டி பலப்படுத்தும் பணி
/
பா.ஜ., பூத் கமிட்டி பலப்படுத்தும் பணி
ADDED : ஆக 02, 2025 10:58 PM
திருவாடானை : சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பா.ஜ., பூத் கமிட்டிகளை பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடக்கிறது. தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது.
தி.மு.க., அ.தி.மு.க., வினர் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வரிசையில் பா.ஜ., கட்சியும் பூத் கமிட்டி அமைத்து பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இது குறித்து பா.ஜ., ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முரளிதரன் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் 1337 பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பூத்திற்கும் பா.ஜ., வினர் அமைத்துள்ள பூத் கமிட்டியில் இருக்கும் அனைவரும் கட்சியின் உறுப்பினர்களா என்பதை சரிபார்க்கும் பணிகள் நடக்கிறது.
வார்டு வாரியாக மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்பது, மத்திய அரசின் திட்டங்களில் பயனாளிகளை சேர்ப்பது, பூத் கமிட்டிஇல்லாத இடங்களில் பூத் கமிட்டி அமைப்பது, மத்திய அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விளக்குவது உள்ளிட்ட பணிகள் நடக்கிறது என்றார்.