ADDED : அக் 27, 2024 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்,:தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள், டிரைவர்கள், கண்டக்டர்கள், அரசு அலுவலகப் பணியாளர்கள் என 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.
அரசு தரப்பில் பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டது.
அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அதிகபட்சமாக ரூ.16,400 வரை கிடைக்கும் என்பதால் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
தீபாவளிக்கு சில நாட்களே உள்ள நிலையில் இது வரை போனஸ் வழங்கப்படாததால் ஏமாற்றத்தில் உள்ளனர்.
இன்று ஞாயிறு விடுமுறை. நாளை (அக்.28) வழங்கினாலும் மாலையில் தான் வங்கி கணக்கில் ஏற்றப்படும்.
தீபாவளிக்கு அக்.29, 30 என 2 நாட்கள் இருப்பதால் தொழிலாளர்கள் தவிப்பில் உள்ளனர்.