/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தாய்ப்பால் விழிப்புணர்வு முகாம்
/
தாய்ப்பால் விழிப்புணர்வு முகாம்
ADDED : ஆக 14, 2025 11:31 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் மகளிர் அதிகாரம் பெறுதல் அமைப்பின் சார்பில் மாணவிகளுக்கு தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் சசிதாரணி வரவேற்றார். சிறப்பு விருந்தினர் தேவிபட்டினம் வட்டார மருத்துவ அலுவலர் ஜென்னத் யாஸ்மின், ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ அலுவலர் நிவேதா ஆகியோர் தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிப்பு குறித்து விரிவாக பேசினர்.
தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா, செய்யது அம்மாள் அறக்கட்டளை மருத்துவர் சானாஸ் பரூக் வாழ்த்து தெரிவித்தனர். பேராசிரியர் ஜென்னத்துல் ரசீனா நன்றி தெரிவித்தார்.
ஏற்பாடுகளை மகளிர் அதிகாரம் பெறுதல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சத்தியவதி, மற்றும் அமைப்பின் பேராசிரியர்கள், நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது மற்றும் மேற்பார்வையாளர் சபியுல்லா செய்தனர்.