ADDED : ஜூலை 29, 2026 03:09 AM

அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை அருகே கருப்பூர்- திருவடிமதியூர் இணைப்பில் அமைந்துள்ள பாலம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
இப்பாலம் பல்வேறு கிராமங்களை இணைப்பதால் போக்குவரத்து அதிகமாக உள்ளது. இப் பாலத்தின் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன.
இன்னும் சில மாதங்களில் பருவமழை துவங்க இருப்பதால் பாலத்தின் நிலை மோசமடைந்து விடும். பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன் பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
