ADDED : மார் 27, 2025 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: செங்குடி, எட்டியதிடல், முத்துப்பட்டினம், சேத்திடல், சவேரியார் பட்டினம், இருதயபுரம், மங்கலம் பகுதிகளில் அதிகளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்பத்தால் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தி செடிகள் வெயில் நேரங்களில் வெப்பத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல் வாடி வதங்குகின்றன. சில பகுதிகளில் கண்மாய் பாசனம் மூலம் பருத்தி செடிகளை விவசாயிகள் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மானாவரி நிலங்களில் உள்ள பருத்தி செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத சூழல் உள்ளதால் மானாவாரி நிலங்களில் கோடை சாகுபடியாக பருத்தி சாகுபடி செய்த விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.