UPDATED : அக் 31, 2026 07:11 PM
ADDED : அக் 31, 2026 07:06 PM

அ நிறம் | அளவு
தொண்டி: தொண்டியில் இருந்து அறந்தாங்கி செல்லும் சாலையில் கைகுளான் பஸ் ஸ்டாப் உள்ளது. இங்கு மூன்று ரோடுகள் சந்திக்கும் இடமாக உள்ளது. இரவு நேரங்களில் விளக்கு வசதியில்லாததால் பயணிகள் இருளில் நிற்கின்றனர். பயணிகள் கூறுகையில், பட்டுக்கோட்டை செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ள இந்த முக்கியமான பஸ்ஸ்டாப்பில் விளக்கு வசதி இல்லாமல் உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக இந்த பஸ்ஸ்டாப்பில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றனர்.
