நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: ஏர்வாடி குத்பா பள்ளிவாசல் வளாகப் பகுதியில் ஆறடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு இருந்தது. இது குறித்து ஏர்வாடி தீயணைப்பு அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனடிப்படையில் நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையில் மீட்பு படை வீரர்கள் சாரை பாம்பை உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பத்திரமாக பிடித்தனர். பின்னர் ஏர்வாடி அருகே உள்ள வனப்பகுதியில் சாரைப்பாம்பு விடப்பட்டது.

