/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் 102 பெண்கள் உட்பட 210 பேர் கைது
/
பரமக்குடியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் 102 பெண்கள் உட்பட 210 பேர் கைது
பரமக்குடியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் 102 பெண்கள் உட்பட 210 பேர் கைது
பரமக்குடியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் 102 பெண்கள் உட்பட 210 பேர் கைது
ADDED : நவ 07, 2025 03:45 AM

பரமக்குடி: பரமக்குடி அருகே இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்ட நிலையில் நேற்று தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த 102 பெண்கள் உட்பட 210 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் இளமனுார் கிராமத்தில் போர்டு வைப்பதில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது பரமக்குடி, நயினார்கோவில், சத்திரக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சிலர் ரோடு மறியல் செய்தனர். தொடர்ந்து நேற்று பரமக்குடி ஐந்து முனை ரோடு பகுதியில் சம்பவத்தை கண்டித்து தேவேந்திரர் பண்பாட்டு கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.
போலீசார் அனுமதி மறுத்த நிலையில் எஸ்.பி., சந்தீஷ், ஏ.டி.எஸ்.பி., பாலச்சந்திரன், டி.எஸ்.பி., சபரிநாதன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பரமக்குடி தேவேந்திரர் பண்பாட்டு கழக தலைவர் சக்கரவர்த்தி தலைமையில் நுாற்றுக் கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இளமனுாரில் பாதிக்கப்பட்ட மக்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும். அப்பாவி மக்களை கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதையடுத்து 102 பெண்கள் உட்பட 210 பேரை போலீசார் கைது செய்து திருமண மஹாலில் அடைத்த நிலையில் மாலை விடுவிக்கப்பட்டனர்.

