/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காவிரி குழாய் உடைப்பு குடிநீர் வீணாகிறது
/
காவிரி குழாய் உடைப்பு குடிநீர் வீணாகிறது
ADDED : டிச 28, 2025 05:25 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் கமுதி ரோடு பேரூராட்சி அலுவலகம் அருகே காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாவதால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு ரோட்டோரத்தில் அமைக்கப்பட்டுள்ள குழாய் மூலம் காவிரி குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. முதுகுளத்துார் கமுதி ரோடு பேரூராட்சி அலுவலகம் அருகே காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது.
இதனால் சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது. குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. இதனால் தொடர்ந்து குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நிரந்தர காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

