ADDED : டிச 28, 2024 07:34 AM
திருப்புல்லாணி :   திருப்புல்லாணி  சின்னாண்டி வலசை ஊராட்சியில் புதுக்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி  1970ல் கட்டப்பட்ட ஓட்டு கட்டடத்தில் இயங்கியது.  பள்ளி  கட்டடம் சேதமடைந்த நிலையில் இருந்தது. இதையடுத்து ரூ.32.80 லட்சத்தில் புதிய வகுப்பறை பள்ளி கட்டடம் கட்டப்பட்டது. திறப்பு விழா நடந்தது.  மாவட்ட கல்வி அலுவலர் கனக ராணி தலைமை வகித்தார். சின்னாண்டி வலசை ஊராட்சி தலைவர் சஞ்சய் காந்தி முன்னிலை வகித்தார்.
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமஜெயந்தி வரவேற்றார்.
யூனியன் பி.டி.ஓ.,க்கள் கோட்டை இளங்கோவன், ராஜேஸ்வரி, அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மலைப்பாண்டி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சேதுபதி, பத்திராதரவை ஊராட்சித் தலைவர் கல்பனா, காளிமுத்து, ஊராட்சி செயலாளர் சுமதி பங்கேற்றனர். உதவி ஆசிரியர் பசுபதி, முரளி மோகன் நன்றி கூறினர்.

