தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பசுமையான வயல்களுக்கு மேல் சூழ்ந்த கார்மேகங்கள்

பசுமையான வயல்களுக்கு மேல் சூழ்ந்த கார்மேகங்கள்

பசுமையான வயல்களுக்கு மேல் சூழ்ந்த கார்மேகங்கள்


UPDATED : நவ 06, 2026 07:31 PM

ADDED : நவ 06, 2026 05:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:31 PM ADDED : நவ 06, 2026 05:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவாடானை: திருச்சி–ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பெரிய கீரமங்கலம் அருகே பசுமையான வயல்களுக்கு மேல் கார்மேகங்கள் சூழ்ந்தன. திருச்சி–ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் திருவாடானை அருகே பெரிய கீரமங்கலம் பகுதி வயல்கள் இயற்கை விரும்பிகளை கவரும் வகையில் அழகிய காட்சிகளை தந்துள்ளது. இப்பகுதியில் அமைந்துள்ள பசுமையான வயல்களில் சூழ்ந்துள்ள கார்மேகங்கள் காண்போரை கவர்கிறது. மழைக் காலம் என்பதால் வயல்களில் பயிர்கள் வளர்ந்து பசுமையாக மாறியுள்ளன.

வயல்களின் மேலே திரண்டு நிற்கும் கார்மேகங்கள் வயல்களையும், சாலையின் அழகையும் மேலும் மெருகூட்டியுள்ளது. இச்சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் இயற்கையின் அழகை ரசித்து செல்கின்றனர். இருபுறமும் உள்ள வயல்வெளிகளும், பசுமை போர்த்திய இயற்கை எழிலும் பயணிகளுக்கு மன அமைதியை தருகிறது. ஏராளமானோர் தங்களது அலைபேசியில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us