UPDATED : அக் 24, 2026 03:06 AM
ADDED : அக் 23, 2026 09:57 PM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு கூட்டுறவுத்துறை ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் விஜயராமலிங்கம் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் ஜெயசங்கர், பாலாஜி முன்னிலை வகித்தனர்.
செயலாளர் மணிகண்டன் பேசுகையில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரை மாற்ற வேண்டும். ஊழியர் விரோத போக்கை கைவிட வேண்டும். இதை வலியுறுத்தி அக்.30 ல் அடையாள வேலைநிறுத்தம் செய்யப்படும். அதன்பின் பதிவாளரை மாற்றவில்லை என்றால் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடரும் என்றார். நிர்வாகிகள், ஊழியர்கள் பங்கேற்றனர். --
