ADDED : அக் 23, 2026 09:57 PM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட இடதுசாரி விவசாய சங்கங்கள் சார்பில் அரண்மனை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மயில்வாகணன் தலைமை வகித்தார். இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்தும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தியும் கோஷமிட்டனர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கருணாநிதி, தலைவர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். –––
