பரமக்குடியில் இன்று குரூப்–4 தேர்விற்கு இலவச பயிற்சி
பரமக்குடியில் இன்று குரூப்–4 தேர்விற்கு இலவச பயிற்சி
ADDED : அக் 23, 2026 09:57 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் டி.என்.பி.எஸ்.சி., குரூப்–4 தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
நேரடி பயிற்சி வகுப்புகள் அக்.,23 முதல் வார நாட்களில் நடக்கிறது. பரமக்குடியில் உள்ளவர்கள் தயார் செய்யும் வகையில் இன்று (அக்.,24) முதல் ஆயிர வைசிய கல்வியியல் கல்லுாரியில் பயிற்சி வகுப்பு நடக்கவுள்ளன. இதில் பங்கேற்க விரும்புவோர் தங்களது புகைப்படம் மற்றும் தேர்வுக்கு விண்ணப்பித்த விவரங்களுடன் வேலைவாய்ப்பு மையத்தை அணுகலாம். கூடுதல் தகவல்களுக்கு 94439 92758, 87789 70857 எனும் அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். ––
