/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாநில தடகள போட்டியில் கல்லுாரி மாணவிகள் சாதனை
/
மாநில தடகள போட்டியில் கல்லுாரி மாணவிகள் சாதனை
ADDED : ஆக 14, 2025 11:31 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி மாணவிகள் மாநில அளவிலான தடகள போட்டிகளில் பதக்கம் வென்று சாதித்துள்ளனர்.
சேலத்தில் உள்ள பெரியார் பல்கலையில் மாநில அளவிலான சீனியர் தடகள போட்டி நடந்தது. இதில் ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி மாணவி மதுமிதா குண்டு எறிதலில் 2ம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார். இம்மாணவி மதுரையில் நடந்த ஜூனியர் தடகள போட்டியில் முதலிடம் பெற்று தங்கம் வென்றார்.
மேலும் தேசிய சீனியர் தடகள போட்டிக்கு தேர்வாகியுள்ளார். இதுபோன்று மதுரையில் நடந்த ஜூனியர் தடகள போட்டியில் மின்னியல், மின்னணுவியல் துறை முதலாம் ஆண்டு மாணவி ரித்திகா சங்கிலி குண்டு எறிதலில் 2ம் இடம் பெற்று புதுச்சேரியில் நடைபெறும் தென் இந்திய அளவிலான தடகள போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
மாணவிகளை தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, முதல்வர் பெரியசாமி, உடற்கல்வி இயக்குநர் சத்தியேந்திரன் வாழ்த்தினர்.