sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பெயரில் போலியான வலைதளங்கள் உருவாக்கி வசூல்

/

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பெயரில் போலியான வலைதளங்கள் உருவாக்கி வசூல்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பெயரில் போலியான வலைதளங்கள் உருவாக்கி வசூல்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பெயரில் போலியான வலைதளங்கள் உருவாக்கி வசூல்


UPDATED : செப் 04, 2025 03:48 AM

ADDED : செப் 04, 2025 12:21 AM

Google News

UPDATED : செப் 04, 2025 03:48 AM ADDED : செப் 04, 2025 12:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பெயரில் போலியான வலைதளங்கள் உருவாக்கி பக்தர்களை ஏமாற்றி பூஜை கட்டணங்களை வசூலித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமுாறு கோயில் இணை ஆணையர்செல்லத்துரை எஸ்.பி.,யிடம் புகார்அளித்துள்ளார்.

ஆன்லைனில் அவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:



பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்வதற்காக கட்டணமில்லா தரிசனம், ரூ.100, 200 விரைவு தரிசன கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 1008 சங்காபிேஷகம், 1008 கலச அபிேஷகம், அபிேஷகம் உள்ளிட்ட பல்வேறு அபிேஷகங்கள் கோயில் மூலம்செய்யப்பட்டுள்ளது.

கோயிலின் அதிகாரப்பூர்வ வலைதளமான “https://www.rameswaramramanathar.hrce.tn.gov.in/ -ல் பணம் செலுத்தி முன்பதிவு செய்ய வசதி செய்து தரப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோயில் மூலம் மேற்கொள்ளப்படும் தரிசனம் மற்றும் அபிஷேகங்களுக்கு சிலர்

1.https://temple.yatradham.org/puja/rameshwaram-rudrabhishek-puja,

2.https://dorituals.com/listing/rudrabhishek-at-rameswaram,

3.https://gotirupati.com/rameswaram-rudrabhishekam

4.https://www.panditinrameshwaram.com

ஆகிய போலி இணையதளங்களை உருவாக்கி கோயில் பெயர், புகைப்படங்களை பதிவேற்றம் செய்தும், பூஜை விபரம், பூஜைக்கான கட்டண விபரங்கள், பூஜை நேரம், தொடர்பு எண்கள், இ-மெயில் விபரங்களை குறிப்பிட்டு அனைத்தும் கோயில் நிர்வாகம் மூலம் நடைபெறுவது போன்று தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். பக்தர்களை ஏமாற்றிசட்ட விரோதமாக பணப்பலன் அடைந்து வருகின்றனர். இதனால் கோயிலுக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது.

இந்த போலி இணையதளங்கள் மூலம் ஏமாற்றம் அடைந்த குஜராத் மாநிலம் சூரத் மற்றும் உத்தரபிரதேசம் காசியாபாத்தை சேர்ந்த பக்தர்கள் வசூல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு புகார் அளித்துள்ளனர்.

கோயில் பணியாளர் மூலம் அந்த இணையதளத்தில் தொடர்பு கொண்டு பக்தரை போன்று பேசிய போது 'வாட்ஸ் ஆப் வழியாக பணம் அனுப்ப கேட்டதை அலைபேசி வாயிலாக (ஆடியோ) பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.எனவே போலி இணையதளம் உருவாக்கியவர்கள், இதில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us