UPDATED : நவ 04, 2026 11:11 AM
ADDED : நவ 04, 2026 11:07 AM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நடந்தது.
இதில் நுகர்வோர் விழிப்புணர்வு தொடர்பாக பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் சிவகுரு பிரபாகரன் பரிசு வழங்கினார். மாணவர்களுக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் மற்றும் செறிவூட்டப்பட்ட அரிசியில் உள்ள நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
