ADDED : நவ 04, 2026 03:26 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வாலாந்தரவை அருகே மணல் கடத்தப்படுவதாக கலெக்டர் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் ராமநாதபுரம் தாசில்தார் பழனிக்குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு சென்றனர். அப்போது வாலாந்தரவை பகுதியில் வந்த டிராக்டரை சோதனை செய்ததில் அனுமதியின்றி மணல் கடத்தியது தெரிய வந்தது. டிராக்டரை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
