/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சூறாவளி : ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் ரயில்கள் செல்ல தடை 45 நிமிடம் தாமதமாக சென்றன

ADDED : நவ 27, 2025 01:58 AM
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் சூறாவளி வீசியதால் பாலத்தில் ரயிலில் செல்ல தடை விதிக்கப்பட்டு, பின் 45 நிமிடம் தாமதமாக சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலும்,ஒரு மணி நேரம் தாமதமாக மதுரை பயணிகள் ரயிலும் சென்றன.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் ராமேஸ்வரம், பாம்பன் பகுதியில் சூறாவளி வீசுகிறது. நேற்று மாலை பாம்பனில் மணிக்கு 58 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசியதால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் பாம்பன் பாலம் நடுவில் உள்ள துாக்கு பாலத்தில் பொருத்தி உள்ள அனிமோ மீட்டர் கருவி தானியங்கியாக இயங்கிய நிலையில் ( 55 கி.மீ., மேல் காற்று வீசினால் ரெட் சிக்னல் காட்டும்) ரயில்கள் செல்ல தடை விதித்து ரெட் சிக்னல் காட்டியது. இதனால் நேற்று மாலை 5:50 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் பாம்பனில் நிறுத்தப்பட்டது.
அதன் பின் காற்றின் வேகம் குறைந்ததும் 45 நிமிடம் தாமதமாக புறப்பட்டு பாம்பன் பாலத்தை கடந்து சென்றது. இதனைத் தொடர்ந்து மாலை 6:10 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை சென்ற பயணிகள் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றது.