ADDED : செப் 21, 2024 05:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே பொசுக்குடிபட்டி கிராமத்தில் சேதமடைந்த மின்கம்பத்தால் மக்கள் அச்சப்படுகின்றனர்.
முதுகுளத்துார் அருகே பொசுக்குடிபட்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு முதுகுளத்துார் துணை மின் நிலையத்திலிருந்து மின்சப்ளை செய்யப்படுகிறது.
கடந்த பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மின்கம்பம் தற்போது சேதமடைந்து மேல்பகுதியில் விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளன.
வீட்டிற்கு முன் சேதமடைந்த நிலையில் இருப்பதால் மக்கள் ஒருவித அச்சத்துடன் உள்ளனர். பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற மின்வாரியத்தினர்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.