தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பரமக்குடி ஓட்டப்பாலம் வளைவில் ஆபத்து

பரமக்குடி ஓட்டப்பாலம் வளைவில் ஆபத்து

பரமக்குடி ஓட்டப்பாலம் வளைவில் ஆபத்து


UPDATED : நவ 03, 2026 04:55 AM

ADDED : நவ 02, 2026 07:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2026 04:55 AM ADDED : நவ 02, 2026 07:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரமக்குடி: பரமக்குடி, இளையான்குடி ரோட்டில் ஓட்டப்பாலம் பகுதி சென்டர் மீடியன் உடைந்த நிலையில் வாகனங்கள் ஆபத்தான நிலையில் கடக்கிறது.

பரமக்குடி, மதுரை ரோடு மற்றும் இளையான்குடி ரோடு சந்திக்கும் பகுதியில் ஒட்டப்பாலம் உள்ளது. இதன் வழியாக மூன்று திசைகளிலும் வாகன போக்குவரத்து இருக்கிறது. மேலும் ஹேர்பின் வளைவு உள்ள நிலையில் அங்கிருந்த சென்டர் மீடியன் கட்டுமானம் உடைந்துள்ளது. தொடர்ந்து தரை தளத்துடன் காணப்படும் சென்டர் மீடியன் பகுதியில் எதிர் எதிர் திசையில் வாகனங்கள் செல்லும் போது விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.

இதன் வழியாக கிராமப்புற பஸ்கள் உட்பட திருச்சி, சென்னை செல்லும் தொலை துார பஸ்களும் இரவு நேரங்களில் அதிமாக கடக்கிறது. மேலும் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தனியார் மற்றும் அரசுப் பள்ளி, மருத்துவமனைகள், ஹோட்டல்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. இதனால் நாள் முழுவதும் போக்குவரத்து அதிகம் உள்ளது.

எனவே சென்டர் மீடியனை சீரமைப்பதுடன் சிக்னல் விளக்குகளை பொருத்த துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us