/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கார்த்திகை தீபத்திற்கு அலங்கார விளக்குகள்
/
கார்த்திகை தீபத்திற்கு அலங்கார விளக்குகள்
ADDED : டிச 13, 2024 04:13 AM

சாயல்குடி: கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சாயல்குடி நகர் பகுதியில் கார்த்திகை தீப விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன.
பல வண்ண அலங்காரத்தில் ஏராளமான வடிவங்களில் அகல் விளக்குகள் விற்பனை செய்யப்படுகிறது. சாயல்குடியைச் சேர்ந்த அகல் விளக்கு விற்பனையாளர் பால்பாண்டி கூறியதாவது:
முன்பு கார்த்திகை தீப விளக்குகளை மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்தோம். தற்போது பலவண்ண அலங்கார விளக்குகள் களிமண் மற்றும் சைனா களிமண் உள்ளிட்டவைகளால் விழுப்புரம் பகுதியில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்யப்படுகிறது.
ரூ.10க்கு மூன்று விளக்குகள், மற்றும் ரூ. 20, 30, 50 ஆகிய விலைகளில் பல வகைகளாக பிரித்து விற்பனை செய்யப்படுகிறது. கார்த்திகை திருநாளை முன்னிட்டு இவ்வகையான விளக்குகளில் எண்ணெய் நிரப்பி திரியிட்டு வீடுகள், கடைகள், கோயில்களில் விளக்கு அலங்காரம் செய்வதற்கு ஏற்ற வகையில் உள்ளன என்றார்.

