ADDED : டிச 19, 2025 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரை செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரியில் ஆசிரியர்களுக்கான மேம்பாட்டு கருத்தரங்கம், புதிய யோசனை உருவாக்கும் முறைகள் எனும் தலைப்பில் நடந்தது. முதல்வர் ராஜசேகர் தலைமை வகித்தார்.
துணை முதல்வர் பெரோஸ்கான் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஐ.சி.டி., அகாடமி பயிற்சியாளர் அர்ஜுன் விஜயன் பங்கேற்று புதிய யோசனை உருவாக்கம் எனும் தலைப்பில் பயிற்சி அளித்தார்.
மூன்று நாட்கள் நடந்த பயிற்சிக்கு பல்வேறு கல்லுாரிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் சாகுல் ஹமீது, விக்னேஷ் குமார் செய்திருந்தனர்.

