ADDED : நவ 13, 2024 09:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் நீராடும் பக்தர்கள் வசதிக்காக எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டி நிதி ரூ.9.50 லட்சத்தில் கடற்கரையில் கழிப்பறை கட்டடம் அமைக்கப்பட்டது.
இந்த கட்டடம் அமைத்து ஓராண்டிற்கும் மேலாகியும் திறப்பு விழா காணாத நிலையில் சில நாட்களுக்கு முன்பு பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. மின் விளக்குகள் இன்றி இருள் சூழ்ந்தும், கழிப்பறையில் ஹேண்ட்செட் பைப் உடைந்தும் கிடக்கிறது. திறந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் மின் விளக்கு இன்றி, பைப்புகள் உடைந்து கிடப்பதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

