/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் பக்தர்கள் குவிந்தனர்
/
ராமேஸ்வரத்தில் பக்தர்கள் குவிந்தனர்
ADDED : மார் 17, 2025 02:10 AM

ராமேஸ்வரம்: விடுமுறைதினத்தையொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தின் பல பகுதியில் இருந்து பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர்.
முதலில் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி விட்டு, கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர். பின் கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த பூஜையில் சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் வருகையால் ராமேஸ்வரம் பஸ்ஸ்டாண்ட் முதல் கோயில் மேலவாசல், அக்னி தீர்த்த கடற்கரை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
இங்கு பார்க்கிங் வசதி இல்லாததால் தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் வாகனங்களை நிறுத்தியதால் போக்குவரத்து பாதித்தது.