/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் தி.மு.க., கூட்டம்
/
பரமக்குடியில் தி.மு.க., கூட்டம்
ADDED : ஜூன் 26, 2025 10:52 PM
பரமக்குடி; பரமக்குடி காந்தி சிலை முன்பு நகர் தி.மு.க., தெற்கு இளைஞரணி சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
தெற்கு நகர் இளைஞர் அணி அமைப்பாளர் வக்கீல் துரைமுருகன் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் மற்றும் தி.மு.க., தெற்கு நகர் செயலாளர் சேது கருணாநிதி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சம்பத் ராஜா, துணை அமைப்பாளர்கள் சம்பத்குமார், குமரகுரு முன்னிலை வகித்தனர். மனிஷ் குமார் வரவேற்றார். பரமக்குடி எம்.எல்.ஏ., மற்றும் தி.மு.க., மாவட்ட பொருளாளர் முருகேசன், தலைமை கழக பேச்சாளர் வக்கீல் மோகநிதி பேசினர். முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தர்ராஜன், மாநில தீர்மான குழு துணைத் தலைவர் திவாகர் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.
*ஆர்.எஸ்.மங்கலத்தில் நகர் தி.மு.க., சார்பில் நான்காம் ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. நகர் செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் நல்ல சேதுபதி முன்னிலை வகித்தார்.
தி.மு.க., ஆட்சியின் நான்காண்டு திட்டங்கள், சாதனைகள் குறித்து சிறப்பு பேச்சாளர் நிலோபர் நிஷா பேசினார். பேரூராட்சி தலைவர் மவுசூரியா, கந்தசாமி, மருது, இமாமுதீன், தென்றல் ஜலீல் ,நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.