நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே பனைக்குளத்தில் தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள்கட்சி ஆலோசனைக் கூட்டம் கிழக்கு மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும்,கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கப்பட்டது.
தொடர்ந்து கட்சியின் சாதனைகள், செயல்பாடுகள் குறித்தும் பொதுமக்களிடம் விளக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. கூட்டத்தில் பல்வேறு கட்சியினர் புதிய உறுப்பினர்களாக இணைக்கப்பட்டனர்.
த.மு.மு.க., மாவட்ட செயலாளர் ஜாவித் அஸ்ஸாம், ம.ம.க., மாவட்டச் செயலாளர் முகமது ஜிப்ரி, மாவட்டத் துணைச் செயலாளர் உபயத்துல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

