ADDED : நவ 21, 2025 04:16 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் இ-கிளப் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். ஸ்டார்ட்டப் நிறுவனத்தை சேர்ந்த ஆனந்த், நிறுவனர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தனர். முதல்வர் பெரியசாமி வரவேற்றார்.
தமிழ்நாடு ஸ்டார்ட்டப் நிறுவன நிர்வாக செயல் அதிகாரி சிவராஜா பேசுகையில், டிஜிட்டல் துறையின் வளர்ச்சி அடிப்படை தேவையாகியுள்ளது. ஏஐ தொழில் நுட்ப அறிவின் காரணமாக தொழில் துறையில் அதிவேக மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. கல்வி நிறுவனங்களில் இ-கிளப் குறித்தும், புதிய கண்டுப்பிடிப்புகள் பற்றியும் மாணவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்றார்.
ஸ்டார்ட்டப் நிறுவனம், கல்லுாரி இன்குபேஷன் கவுன்சிலும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தினர். ஏற்பாடுகளை கம்ப்யூட்டர் துறை தலைவர் கார்த்திகேயன் செய்திருந்தார். மேலாண்மை துறை தலைவர் மெய்கண்ட கணேஷ் குமார் நன்றி கூறினார்.

