தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமேஸ்வரம் ரயில்களில் கூடுதல் ஏ.சி.,பெட்டிகள்

 ராமேஸ்வரம் ரயில்களில் கூடுதல் ஏ.சி.,பெட்டிகள்

 ராமேஸ்வரம் ரயில்களில் கூடுதல் ஏ.சி.,பெட்டிகள்


ADDED : செப் 29, 2026 03:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 03:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரி, திருப்பதி செல்லும் ரயில்களில் அக்.,1 முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.

ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு திங்கள், புதன், சனிக்கிழமைகளில் இரவு 8:50 மணிக்கும், கன்னியாகுமரியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் இரவு 11:00 மணிக்கும் விரைவு ரயில் இயக்கப்படுகிறது.

ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பதிக்கு ஞாயிறு, செவ்வாய், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் மாலை 4:55 மணிக்கும், திருப்பதியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு திங்கள், புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் காலை 11:55 மணிக்கும் விரைவு ரயில்கள் இயக்கப்படுகிறது.

இந்த ரயில்களில் 3 ஏ.சி., வகுப்பு, 8 ஸ்லீப்பர் வகுப்பு, 4 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. பண்டிகை காலத்தை முன்னிட்டு அக்., 1 முதல் 2027 ஜன., 6 வரை கூடுதலாக ஒரு ஏ.சி., வகுப்பு பெட்டி இணைக்கப்படவுள்ளது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us