ADDED : நவ 14, 2025 04:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் அடுத்த அரசடிவண்டல் கிராமத்தில் விவசாயிகளுக்கான பண்ணை பள்ளி பயிற்சி வகுப்பு நடந்தது.
பரமக்குடி உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். நயினார்கோவில் வேளாண் உதவி இயக்குனர் பானு பிரகாஷ் முன்னிலை வகித்தார். உழவர் நிபுணர்களை உருவாக்கும் வகையில் ஆறு வாரங்கள் முறைசாரா பள்ளிக்கூடமாக நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தனர்.
முன்னோடி விவசாயி இருளாண்டி மேற்கொண்ட நெல் செயல் விளக்கத்த திடலில் பயிற்சி நடந்தது. நெல் சம்பா பயிருக்கு முன்னதாக தக்கை பூண்டு வளர்த்து மடக்கி உழவு செய்ய வேண்டும். பசுந்தாள் உரங்களின் நன்மை பற்றியும் நெல் ரகங்கள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. வேளாண் தொழில்நுட்ப அலுவலர்கள் ஜெயபிரியா, முனியசாமி ஏற்பாடுகளை செய்தனர்.

