/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கரிமூட்டங்களில் போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலை
/
கரிமூட்டங்களில் போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலை
கரிமூட்டங்களில் போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலை
கரிமூட்டங்களில் போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலை
ADDED : டிச 11, 2025 05:27 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் வட்டாரத்தில் பெய்து வரும் மழையால் கரிமூட்டம் தொழில் பாதிப்படைந்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
முதுகுளத்துார் வட் டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் மானா வாரியாக நெல் விவசாயம் செய்கின்றனர். பல ஆண்டு களாக தொடர் மழை, வறட்சியால் கண்மாய்க்கு தண்ணீர் வராமல் இருப்பதால் விவசாயம் பாதிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து ஒரு சில கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்களது விளை நிலங்களை விற்பனை செய்து வெளி மாநிலங்களுக்கு வேலைக்கு சென்றனர்.
ஒரு சிலர் சீமைக்கருவேல மரங்களை வெட்டி கரிமூட்டம் தொழில் செய்கின்றனர்.அதில் ஓரளவு லாபம் கிடைப்பதால் தொடர்ந்து செய்கின்றனர். முதுகுளத்துார் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் கரிமூட்டம் தொழில் செய்து வந்த இடங்களில் தண்ணீர் தேங்கி வீணாகியது.
ஒரு சில இடங்களில் நன்கு கரிகள் வெந்த நிலையில் மழையால் ஈரப்பதம் ஏற்பட்டு வீணாகியது. கடந்த ஆண்டை காட்டிலும் ஒரு மூடை ரூ.300 குறைவாக விற்பனையானதால் விவசாயிகள் கரிமூட்டத்தை பிரிக்காமலே விட்டுள்ளனர். இதனால் நஷ்டம் ஏற்பட்டது. கரிமூட்டம் தொழில் மழையால் மிகவும் பாதிப் படைந்துள்ளது.

