/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பஸ் ஸ்டாண்டில் ஹைமாஸ் விளக்கு சீரமைக்கப்படுமா
/
பஸ் ஸ்டாண்டில் ஹைமாஸ் விளக்கு சீரமைக்கப்படுமா
ADDED : டிச 11, 2025 05:28 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்துார் பல்வேறு கிராமங்களுக்கும் மையப்பகுதியாக இருப்ப தால் இங்குள்ள பஸ் ஸ்டாண்டிற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த பஸ் ஸ்டாண்ட் வரும் பயணிகள் பாதுகாப்பிற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட்டது.
முறையான பராமரிப்பு இல்லாததால் விளக்குகள் பழுதடைந்து பாதி கம்பத்தில் தொங்குகின்றன. இதனால் பஸ் ஸ்டாண்ட் வளாகம் இருள் சூழ்ந்து உள்ளதால் இரவில் பஸ் ஸ்டாண்ட் வரும் பெண் பயணிகளும் சிறுவர்களும் அச்சத்துடன் வந்து செல்லும் நிலை உள்ளது. எனவே அதி காரிகள் விளக்கை சீரமைக்கவேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

