/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வனத்துறையினருக்கு தீ விபத்து தடுப்பு குறித்து தீயணைப்புதுறையினர் பயிற்சி

ADDED : ஆக 07, 2025 08:13 AM

ராமநாதபுரம் : மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம் வனத்துறையில்பணிபுரியும் அதிகாரிகள், அலுவலகர்களுக்கு தீயணைப்பு துறை சார்பில் தீ விபத்து முன்னெச்சரிக்கை, தடுப்புகுறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் வனத்துறை அலுவலக வளாகத்தில் நடந்த தீ விபத்துதடுப்பு, விழிப்புணர்வு பயிற்சி முகாமிற்கு மன்னார் வளைகுடாகடல்வாழ் உயிரின காப்பாளர் முருகன் தலைமை வகித்தார்.ராமநாதபுரம் தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் கோமதி அமுதா முன்னிலை வகித்து தீ விபத்துகள்பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் தடுப்புமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
விபத்தின் போது தீப்பற்றி எரியும் போது அதனை எவ்வாறு அணைப்பது என்பது குறித்துதீயணைப்புதுறை வீரர்கள் செயல்முறை விளக்கம் செய்துகாட்டினர். இதில் உதவி வனக்காப்பாளர் கோபிநாத்,வனச்சரகர்கள், வனவர்கள், வாட்சர்கள் பங்கேற்றனர்.