/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீன்களின் உற்பத்தியை அதிகரிக்க ஊருணியில் வளர்ப்பு திட்டம்
/
மீன்களின் உற்பத்தியை அதிகரிக்க ஊருணியில் வளர்ப்பு திட்டம்
மீன்களின் உற்பத்தியை அதிகரிக்க ஊருணியில் வளர்ப்பு திட்டம்
மீன்களின் உற்பத்தியை அதிகரிக்க ஊருணியில் வளர்ப்பு திட்டம்
ADDED : நவ 12, 2025 10:22 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் சூரங்கோட்டை ஊராட்சி இடையர்வலசை கிராமத்தில் உள்ள ஐயர் மடம் ஊருணியில் மீன்கள் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்தை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் துவக்கி வைத்தார்.
கலெக்டர் கூறியதாவது: மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 80 எக்டேரில் மீன்கள் வளர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு திட்டம் துவக்கப்பட்டுள்ளது. மீன்வளத்துறை சார்பில் கிராமங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டம் செயல்படுத்தப்பட்டு மீன்கள் உற்பத்தியை அதிகரிக்க உள்ளனர். தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிகளில் உள்ள நீர் நிலைகளில் மீன்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றார்.
மீன்வளத்துறை துணை இயக்குநர் வேல்முருகன், உதவி இயக்குநர் ராஜேந்திரன், ராமநாதபுரம் பி.டி.ஓ., சோமசுந்தரம் உட்பட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.