நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் கிளை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் 104வது நிறுவனர் தினத்தை முன்னிட்டு வங்கி, வாசன் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தினர்.
கிளை மேலாளர் சரவணன் தலைமை வகித்தார். முகாமில் கம்ப்யூட்டர் கண் பரிசோதனை, கண்ணாடி பரிசோதனை, கண்புரை நோய் கண்டறிதல், கண்ணில் தசை வளர்வதை கண்டறிதல் பரிசோதனைகளை டாக்டர்கள் செய்தனர். முதுகுளத்துார் வட்டாரத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்தனர்.

