ADDED : ஆக 09, 2026 12:20 AM

அ நிறம் | அளவு
தொண்டி: தொண்டி கடற்கரையில் கொளுஞ்சி செடி களுக்கு தீ வைக்கப்பட்ட தால் பழைய மீன்பிடி வலைகள் சேதமடைந்தது.
தொண்டி மகாசக்தி புரத்தை சேர்ந்த செல்வம், பிரகாஷ் ஆகியோருக்கு சொந்தமான வலைகள் கடற்கரையில் வைக்கப்பட்டிருந்தன. நேற்று அதிகாலையில் அந்த பக்கமாக சென்ற மீனவர்கள் வலைகள் தீயில் கருகி இருந்ததை பார்த்தனர். அருகிலிருந்த ஒரு பிளக்ஸ் போர்டும் எரிந்து சேத மடைந்திருந்தது.
இது குறித்து போலீசார் கூறுகையில், கடற்கரையில் கொளுஞ்சி செடிகளுக்கு யாரோ தீ வைத்துள்ளனர். அப்போது மீனவர்கள் பயன் படுத்தாமல் வைத்திருந்த பழைய வலைகள் மீது தீ பரவியுள்ளது. மீனவர்களிடமிருந்து புகார் வரவில்லை என்றனர்.
