UPDATED : அக் 30, 2026 08:20 PM
ADDED : அக் 30, 2026 08:17 PM
அ நிறம் | அளவு
தேவிபட்டினம்: தேவிபட்டினத்தில் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் குப்பையை கடற்கரையோர பகுதிகளில் கொட்டுவதால் கடற்கரை பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பை கொட்டுவதை கண்காணித்து அகற்ற வேண்டிய ஊராட்சி நிர்வாகம் உடனுக்குடன் அகற்றாததால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் நேரடியாக கடலில் கலப்பதால் கடல் மாசடைகிறது. இதனால் மீன்வளம் பாதிக்கப்பட்டு மீனவர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கடற்கரையோரம் தேங்கும் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
