/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிழக்கு கடற்கரை சாலையில் குப்பையால் சுகாதாரக்கேடு
/
கிழக்கு கடற்கரை சாலையில் குப்பையால் சுகாதாரக்கேடு
ADDED : நவ 07, 2025 11:13 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் சிலர் இறைச்சி கழிவுகள், குப்பை, கட்டட கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதுடன் காற்றில் பறக்கும் குப்பையால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயல் ஊராட்சியில் துவங்கி ராமேஸ்வரம், கீழக்கரை நான்கு முனை சந்திப்பு வரை கிழக்கு கடற்கரைச் சாலை அமைந்துள்ளது.
இவ்விடங்களில் சிலர் கோழி, ஆட்டிறைச்சி கழிவுகளை கொட்டுகின்றனர். மேலும் கட்டடக் கழிவுகள், பாலிதீன் குப்பையும் குவிந்து கிடக்கின்றன.
சிலர் தீ வைத்து எரிப்பதால் புகை மூட்டம் ஏற்படுகிறது. காற்றில் பாலிதீன் கவர் பறப்பதால் வாகனங்களில் செல்வோர், நடந்து செல்லும் மக்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் கிழக்கு கடற்கரை சாலையில் குவிந்துள்ள குப்பையை அகற்றி, மீண்டும் கொட்டாத வகையில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

